வியாழன், 2 செப்டம்பர், 2021

மாவீரன் மதுரை வீரன் அவர்களின் அவதார திருநாள் 2021



































































  


       மாவீரன் மதுரை வீரன் அவர்களின் அவதார திருநாள் 2021


   ஆதிக்க சக்திகளால் அருந்ததிய மக்கள் நிலமற்றவர்களாக, அதிகாரமற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு வரும் சூழலில் நமது வரலாற்றை மீட்டெடுக்கும் வரிசையில் முதன்மையானவர் மாவீரன் மதுரை வீரன் என்று சொன்னாலும் மிகையாகாது.

   ஏனெனில் தனது  வீரத்திற்காக நாடறியப்பட்டவரை வெறும் கடவுளாக மட்டுமே மாற்றி நம்மை பக்தர்களாக வணங்கிப்போகச் செய்யும் செயலை இது நாள்வரை செய்து வந்துள்ளனர். அத்தகைய போக்கை மாற்றி  மதுரை வீரன் யார் ..???   நாம் ஏன் அவரை போற்றிட வேண்டும்..??  அவரது வரலாற்றை ஏன் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த தளம்.

  நாமெல்லாம் புரட்சியாளர் அம்பேத்கர் அவரது வழியிலே பௌத்தத்தையே பின்பற்றிட வேண்டும் என்பது நம்முடைய இலக்காக இருந்தாலும்,  சமூக ஏற்றத்தாழ்வுகளை தோற்றுவித்து , நம்மை ஒரு அடிமைச்சமூகமாக மாற்றிய இந்து மதத்தை வேறருக்க  எவையெல்லாம் கருவியாக பயன்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் கொண்டு இந்து மத்ததை நமது அருந்ததிய மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். 

யார் நம்மை தீண்டத்தகாதவர்களாக மாற்றினார்களோ அவர்களின் வேத கடவுளர்களை நாம் ஏன் சுமக்க வேண்டும்..?? 

 இதோ எங்கள் முப்பாட்டன் மதுரைவீரன் இருக்கிறார் ஆவணி 17 அன்று நாம் அவரை அவரது வீரத்திற்காக வணங்குவோம் ,, வெறும் பக்தர்களாக அல்ல. அவர் நயவஞ்சகமாக பலியிடப்பட்ட நாளான ஆவணி 17 அன்று அவருக்கு மரியாதை செலுத்தி அவரது வீர வறலாற்றை  நமது அருந்ததிய சொந்தங்களுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் எடுத்துச்செல்வோம்...


  ஆவணி 17 மாவீரன் மதுரை வீரனுக்கு கோவை , மேட்டுப்பாளையம் , பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரியாதை செலுத்தி வரலாற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியில் நமது சொந்தங்கள்..

மேட்டுப்பாளையம் : திரு. நாகேந்திரன்..

பொள்ளாச்சி              : திரு.செல்வராஜ்.