வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மதுரை வீரன் அம்மானை

 அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.


          கி.பி.2 ஆம் நூற்றாண்டில் அம்மானை முதன் முதலாக இலக்கிய வடிவம் பெற்றது. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தை முதன்முதலில் இலக்கியத்தில் பதிவு செய்த இளங்கோவடிகளே அம்மானையையும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் 'அம்மானை வரி' என்ற பகுதியில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளது. இப்பாடல்களில் சோழ மன்னர்கள்மனுநீதிச் சோழன்கரிகால் சோழன்சிபி மன்னன்தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோரின் அருஞ் செயல்களைப் பாடி அவர்களை அடைய வேண்டும் என்று மூவர், சோழர்களின் தலைநகரான பூம்புகார் நகரைப் பாடுவதாக அமைந்துள்ளது.

  உன்மையாக நடந்த வரலாற்று சம்பவங்கள் வழிவழியாக பாடல்கள் வழியாகவும் , கதைகள் வழியாகவும் நூற்றாண்டுகளை கடந்தும் நம்மை வந்தடைகின்றன. ஆனால் வரலாற்றை அச்சில் பதிவு செய்யும் நபர்கள் தங்களது சாதிய வன்மத்தை தங்களது படைப்புகளில் அள்ளித்தெளித்து விடுகின்றனர். ஆனாலும் முழுமையாக வரலாற்றை மறைக்க முடியாமல்  பதிவுகளில் சொல்லப்படும் சம்பவங்கள்,  நாம் உன்மையை பகுத்து அறிந்து கொள்ளும்  வண்ணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே..


    வரலாற்றில் ஆதிக்க சாதியில் வந்த வரலாற்று நாயகர்கள் இன்று வரை வீரர்களாகவே போற்றப்பட்டு அவர்களது வீரம் கொண்டாடப்படும் பொழுது , மாவீரன் மதுரை வீரன் கடவுளாக மட்டும் கொண்டாடப்படுவது ஏன்..??  

    

அம்மானை பாடல்கள் வகையில் நமது மாவீரன்  மதுரை வீரன் அவர்களைப்பற்றி வரலாறு எவ்வாறு பதிவு செய்துள்ளது என்பதை திரு.சீராளன் அவர்கள் தொகுத்து  தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ள வெளியீட்டு எண் - 401. மதுரை வீரன் அம்மானை எனும் நூல் ,  நாம் ஏன் மாவீரன் மதுரை வீரன் அவர்களது உன்மை  வரலாற்றை நம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும். 

    எதற்காக மதுரை வீரன் அவர்களது வரலாற்றை திரித்து அவர்களது வாரிசுகளான அருந்ததிய மக்களை மாவீரன் மதுரைவீரனை வெறும் கடவுளாக மட்டுமே வழிபட வைத்து , வரலாற்று வீரத்தை மழுங்கடித்து ,  ஆதிக்க சக்திகள் நம் மனதில் எதை நிலை நிறுத்த முயன்றனவோ அதை உடைத்து உன்மை வரலாற்றை உலகறியச்செய்வோம்.

     கீழே உள்ள இணைப்பில் திரு.சீராளன் அவர்கள் தொகுத்து  தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ள வெளியீட்டு எண் - 401. மதுரை வீரன் அம்மானை எனும் நூல் தங்களது பார்வைக்காக....

மதுரைவீரன் அம்மானை  

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7lZIy&tag=#book1/