வியாழன், 22 ஜூலை, 2021

The History of Maduraiveeran

 


The History of Maduraiveeran

 

மறைக்கப்பட்ட மதுரை வீரனின் வரலாற்று உண்மைகளும் சரித்திர குறிப்புகளும்

- வீரத்துரை -

 

வரலாற்றில் மாவீரர்களாக       திகழ்ந்த அருந்ததியர்


              ஆதி தமிழர்கள்

 கொள்ளையர்களையும் ஆதிக்க சாதிவெறியர்களையும் அடக்கி சமூக விடுதலைக்கு அடித்தளம் இட்டு சாதிமறுப்பு திருமணம் செய்து மறைந்த உலகம் போற்றும் மாவீரர்; மதுரை வீரன் ஆவார். அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14-ம் நாள் இந்து மதத்ததை விட்டு பௌத்த மார்க்கத்தை தழுவினார். அவரை பின்பற்றி 5லட்சத்திற்கும் மேலானோர் பௌத்த மார்க்கதை தழுவினார்கள். அப்போது 22அம்சங்கள் அடங்கிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். அதில்  ஒன்று பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். இது மக்களை திசை திருப்பும் செயலாகும். இத்தகைய பிரச்சாரம் விஷமத்தனமானது, தவறானது என நம்புகிறேன் என்பதாகும். வரலாற்றை மாற்றி திருத்தி எழுதி நம்ப வைக்கும் ஆரியரின் ஆதிக்க வர்க்கதினரின் சூழ்ச்சிகள்  அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆரியர்களாகவும் ஆதிக்க வர்க்கத்தினராகவும் இருந்ததால் தாழ்த்தப்பட்டோரின் வீர வரலாறுகளை மறைத்தும் திரித்தும் எழுதியதோடு வாய்மொழிக் கதைகள் மூலமும்  மக்களை நம்ப வைத்துள்ளனர். மாவீரன் மதுரை வீரன் வரலாற்றையும் ஆதிக்க வர்க்கதினருக்கு சாதகமான கருத்துக்களை வாய்மொழிக்கதைகள் நாடகங்கள்; மூலம் பரப்பி அனைவரையும் நம்ப வைத்து விட்டனர். அருந்ததியர் இனத்தில் அழகும், அறிவும், ஆற்றலும் நிறைந்த நல்ல உடல் வலிமையும் நற்பண்புகளும் சமயோஜித புத்தி கூர்மையும் உடைய வீரத்தளபதிகள் பலர் இருந்துள்ளனர்.

பூலித்தேவர் காலத்தில் ஒண்டிவீரன் தளபதியாகவும், பாளயத்து தலைவராகவும் கட்டபொம்மன் பாஞ்சாலகுறிச்சியில் ஆட்சி செய்த போது முத்தன் பகடை, பொட்டி பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை ஆகியோரின் படைத்தளபதிகளாகவும் பாளையத்து தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.  இவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக வால் சிலம்பு சண்டைகளில் கைதேர்ந்தவர்களாகவும், கெரில்லா போர்முறையில் எதிராளிகளை எளிதில் தாக்கும் வலிமை பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.  கூத்து என்ற நாடக கலையில் சிறந்தவர்களாகவும் காடு, தோட்டம் கொண்டு செல்வாக்கு மிக்கவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற ஆற்றல் மிக்கவர்கள் அருந்ததிய இனத்தவரும் இன்றும் கூட இருக்கின்றார்கள். சிலம்பு போன்ற வீர விளையாட்டுகள் நாடக கலைகள் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் இன்றும் ஏராளமாய் உள்ளனர். இன்று நிலவும் தாழ்ந்த நிலைக்கு காரணம் என்ன? அருந்ததிய இன மக்களிடையே நிலவிய இன்றும் நிலவும் ஒற்றுமையின்மை, தன்னைத்தான் உணராதது தனக்குள் உள்ள ஆற்றலை உணராதது, அதற்கும் மேலாக ஆதிக்க சாதியினர் தனது பண்ணை, காடு, தோட்டங்களை கவனிக்கும் முழு பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்திருந்ததால் ஆதிக்க வர்க்கதின் சேவைக்காக ஆண்டு முழுவதும் முழுக்குடும்பத்தினரின் உழைப்பை அர்பணித்து இறுதியில் கிடைக்கும் தானியம், கொஞ்சம் பணம் இவற்றிலேயே மன நிறைவு கொண்டவர்களாக வாழ்ந்துவிட்ட பழக்கம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கும் எண்ணம் உருவாகாமலேயே வாழ்ந்துவிட்டனர்.
ஆதிக்கசாதியின்  அடக்குமுறையை எதிர்த்தும் ஆன்மீகக் கோட்பாடுகளின் வன்மையைக் கண்டித்தும் சமூக நீதியை வலியுறுத்தியும் பல காலகட்டங்களில் பலரும் போராடி உயிர் நீத்து உள்ளனர். அவர்களின் உண்மை வரலாற்றை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். அப்படி மறைக்க முடியாதவற்றை திரித்தும் எழுதியுள்ளனர்.
சான்றாக சமூக நீதிக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் , பெண் விடுதலைக்கும் போராடி உயிர் ஈகை செய்த மதுரை வீரனை, பெண் பித்தனாகவும், குடிகாரனாகவும், கேவலமாக சித்தரித்துள்ளார்கள்.
மதுரை வீரனை குறித்த மற்ற நூல்களும் மதுரை வீரனின் சமூகத்தை புறந்தள்ளி, வரலாற்றை மறைக்க பல்வகையிலும் முயன்றுள்ளன. ஆனால் மிக அரிய  வகையில் தமிழ்நாடு முற்போக்க எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தோழர் அருணன் அவர்கள் மிக அண்மையில் எழுதி வெளியிட்ட கொலைக்களங்களின் வாக்கு மூலம் எனும் நூலில் மற்ற ஒடுக்கப்பட்ட தலைவர்களின் வரலாற்றுடன் மதுரை வீரன் வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
கடவுளர்கள் என வழங்கப்படுபவர்களில் சிலர் அந்த காலத்தில் உண்மையில் வாழ்ந்தவர்கள் என்று ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள் எனினும் ஒடுக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களில் இருந்து கிளம்பிய சில வீரர்கள் ஆதிக்க சக்திகளால் பழிவாங்கப்பட்டார்கள். அவர்களை சாமிகள் என அம்மக்கள் வழிபடுவதன் மூலம் அவர்களது நினைவை போற்றி வருவதோடு அதன் மூலம் எழுச்சி பெற்றும் வருகிறார்கள்.
அத்தகையவர்களில் ஒருவரே மதுரைவீரன் என்று அருணன் சுட்டிக்காட்டுகின்றார். ஆதிக்க சாதியினரின் கட்டு திட்டங்களை மீறிய காரணத்தாலே மதுரை வீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குதல் என்ற கொடூரமான தண்டனை தரப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அந்த காலத்தில் மதுரையில் பெரும் எதிர்;ப்பு  கிளம்பியது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்ணாடிக்காரர் சவரிமுத்து என்பவர் தான் வாய் மொழியாகக் கேட்டறிந்த மதுரைவீரன் உண்மை வரலாற்றை நாடகமாக உருவாக்கி அருந்ததியர் வாழும் ஊர்களில் நடத்தி வந்தார்.கதைப்பாடலாக பாடி வரவேற்பைப் பெற்றார். மதுரைவீரன் உரைநடை வரலாற்றைப் பாடலாகப்பாடி  அனைவரையும் கவர்ந்தார்.
மன்னர் திருமலை இன்னும் சரித்திர புருஷராகவே இருக்கிறார். தெய்வமாகவில்லை. மதுரை மீனாட்சியை எந்நாளும் வணங்கி நிற்கும் பக்தராகவே சிலை வடிவில்  கோவிலுக்குள் காட்சி தருகிறார். அவரது சமகாலத்தவராகிய மதுரைவீரனோ சாமியாகிப் போனாh;. அது எப்படி? இதனினும் விந்தை அவன் சாமியானாலும் இன்னும் கோவிலுக்கு  வெளியே தான் நிற்கிறார்.  அது ஏன்?
இதைத் தெரிந்து கொள்ள அவரது கதையின் இல்லையில்லை சரித்திரத்தின் அதிகம் பேசப்படாத சில  அத்தியாயங்களை நாம் பேசியாக வேண்;டும்.
ஆர்.கே. சண்முகமும், கண்ணதாசனும்  மதுரை வீரன் திரைக்கதையில் சின்னான்-செல்லி என்கிற அருந்ததியர் இணைக்கு பிறந்த மதுரை வீரனை காசி ராஜாவுக்கு மகனாக பிறந்த அவனை சின்னானும் செல்லியும் எடுத்து வளர்த்ததாக உண்மை வரலாற்றைத் திரித்தும் கூறியிருக்கிறார்கள். எவ்வித தொடர்பு வசதியும் போக்குவரத்து வசதியும் இல்லாத அக்காலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் காசி வாரணாசியில் காட்டில் விடப்பட்ட வீரன் காவேரி கரையில் கிடந்ததாக கூறி காசிக்கும் காவேரி ஆற்றுக்கும் முடிச்சுப்போட்டுள்ளனர். அப்படி இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன்  திரைப்படத்தில் ஒரு பொய்யான கதையை சொல்லியிருப்பது சாதி வர்ணாசிரம நோக்கமே தவிர வேறொன்றும் இல்லை.
சமூக விடுதலை வீரனை அருந்ததியன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கண்ணதாசனும், வரலாற்று  ஆசிரியர் ஆர்.கே. சண்முகமும், மதுரைவீரன் திரைப்படத்தில் காசி (வாரணாசி) ராஜாவுக்கு  மகனாக  பிறந்தான். பிறந்தவன் கொடிச்சுற்றிப் பிறந்ததால் குலத்துக்கு ஆகாது. மாலை சுற்றி பிறந்ததால் மன்னர்  பரம்பரைக்கு  ஆகாது என காட்டில் விடப்பட்டதாக ஒரு பொய் கதையை புனைந்து அதில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து ஒரு வரலாற்று உண்மையை மறைத்து விட்டனர்.
கண்ணதாசன் எழுதிய திரைக் கதையில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் திரைப்படம் இந்த மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தியது.
ஆனால் இந்த திரைக்கதை பொய்யும் புரட்டும் கலந்து ஒரு மாவீரனுடைய வரலாற்றை கொச்சைப்படுத்தியுள்ளது. உண்மையாகவே சின்னான் செல்லியின் மகனாக மதுரை வீரனை எடுத்து வளர்த்ததாக புனையப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வீரத்தை மறைக்க முயன்றுள்ளது.
மதுரைவீரன் சக்கிலியர் வீட்டுப்பிள்ளையல்ல. ஷத்திரியர் வீட்டுப் பிள்ளை ராஜகுமாரன் எனச் சொல்வதே இதன் நோக்கம். மகாவீரனாகவும், மதுரைக் கள்ளர்களை அடக்கிய தீரனாகவும் உயர்குலப் பெண்டிரும் கண்டு மோகித்த பேரழகனாகவும் இருந்தவனைக் பஞ்சமன் எனச் சொல்ல மனம் வரவில்லை. பிற்காலப் பண்டிதர்கள் ராஜா வீட்டுப்பிள்ளை என்று கதைகட்டி விட்டார்கள்.
அந்தப் படத்தை பார்த்து விட்டு மனம் வெதும்பிய ராயப்பன் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். சின்னான்-செல்லி என்கிற அருந்ததியருக்குப் பிறந்த மதுரைவீரனை எவனோ காசிராஜாவுக்கு பிறந்ததாக கூறி நமக்கு கிடைக்க வேண்டிய பெருமையை மேல் சாதிக்காரன் தட்டிப்பறித்து விட்டான் என்று கூறி வருந்தினார். அப்போது எனது இளம் வயது மனதில் தோன்றியது. மதுரை வீரன் உண்மையான வரலாற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று திரு. இராயப்பன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்ன மதுரை வீரன் வாய்மொழி வரலாற்றைத்தான் நான் உங்களிடம் முன் வைக்கிறேன். மதுரைவீரன் வரலாறு என்னும் இச்சிறு நூலுக்கு சிறிய ஆவணங்களோடு பெரிய ஆதாரங்கள் தேடியதில் பொம்மணப்பாடியில் தொடங்கி கண்ணப்பாடி நத்தக்காடு, சிறுவாச்சூர், நாட்டார் மங்கலம், திருச்சி, மணப்பாறை, துவரங்குறிச்சி நத்தம், சாக்கியப்பட்டியென்னும் சக்கிலியன்கொடை, கள்ளந்தேறி, மதுரை வரை மதுரைவீரன் கால் பதித்த சுவடுகளில் எல்லாம் நாங்களும் நடந்து ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்களே இது.
தனது முன்னோர்களின் வீர வரலாறுகளை அறிந்து துணிவும் போராட்ட குணமும் கொண்டு உறுதியுடன் செயலாற்ற வேண்டும். அருந்ததிய இனம் காத்த மாவீரர் மதுரை வீரன் பற்றி அறிவோம். மதுரை வீரன் காசி மன்னன் துளசிராயன் மகனாகவோ அல்லது வேறு எந்த அரசருக்கோ பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றியும் பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றி பிறந்ததால் குலத்திற்கு ஆகாது என ஜோதிடர் சொல்ல பிறந்த குழந்தையை காட்டில் போட்டார்கள் என்பதோ, ஓடும் ஆற்றில் விட்டார்கள் என்பதோ எல்லாம் கட்டுக்கதை. காசியில் ஓடும் கங்கையும், திருச்சியில் ஓடும் காவிரியும் இன்றும் ஒன்றாக இணையவில்லை. பின் எப்படி காசியில்  விட்ட குழந்தை 3 நாட்களுக்கு பின் சின்னான் கையில்  கிடைக்கும்? மற்றொரு கதையால் காட்டில் கண்டெடுக்கப்பட்டதாய் சொல்வதும் பொய்யே. இவையெல்லாம் மதுரை வீரன் பிறப்பால் அரச குலத்தவன் என்பதால்தான் அவருக்கு வீரம், விவேகம் நல்ல குணம் இருந்தது என்பது போல் காட்ட ஆதிக்க சாதியினரால் புனைந்துரைக்கப்பட்ட கட்டுக்கதைகளே ஆகும்.
    மதுரை வீரன் 1608 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் பொம்மன்னன் என்பவர் ஆட்சி செய்த பாளையத்தில் பணி புரிந்த சின்னான், செல்லி என்ற அருந்ததிய தம்பதிகளுக்கு மகனாய் பிறந்து வீரைய்யன் என பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டதால் நல்ல அழகும் , இளம் வயதிலேயே வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுபவராகவும் புத்தி கூர்மையுள்ளவராகவும், இருந்து வளர்ந்து வாலிபனாய் மாறும் போது அறிவும் ஆற்றலும் பிறர் நலம் நாடும்; நல்ல பண்பும் உரிமை குரல் எழுப்பும் உயரிய சிந்தனை உள்ளவராகவும் இருந்தார். இப்படிக் காலம் போய்கொண்டிருக்கிற வேளையில் அந்தப் பாளையப்பட்டின் அதிபதியான பொம்மன நாயக்கனின் மகள் பொம்மி பெரிய மனுஷியானாள். தீட்டுக் கொள்கை தீவிரமாய் இருந்த காலமது. பெரிய மனுஷியானதால் ஏற்பட்ட தீட்டுக் கழிய முப்பது நாட்கள் குடிசையில் தனித்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. இப்போதும் சடங்கான பெண்ணிற்கு மாமன் கையால் பச்சை ஓலையில் குடிசை கட்டுகிற பழக்கம் இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் வந்திருக்கிறது. பச்சைக்குடிசைகட்டிப் பாங்காய் அலங்கரித்து பொம்மியை இருத்தினார்கள்.
அவளது காவலுக்காக மாதியான் சின்னானுக்கு பதிலாக  மதுரை வீரன் அனுப்பப்பட்டார். தோல் பதனிடும் தொழில் தவிர இத்தகைய காவல் வேலையிலும் சக்கிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பது தொpகிறது. சுண்டுவில்லும் கைப்பிடித்து அம்பு வில்லும் ஆயுதமும் அவன் கையில் தான் பிடித்து என்று வருவதை காணும் போது போர்த் தொழிலையும் அவர்கள் அறிவார்கள் என்பது தெளிவாகிறது.
இளமை உணர்வின் உந்துதலால் இருவர் உள்ளத்திலும் காதல் அரும்புகிறது. இரு மனம் இணைந்து திருமணம் செய்ய இசைகிறது. கடுமையான சாதி கட்டுபாடுகள் இவர்கள் இணைவதை தடுக்கிறது. காதலை அறிந்த பொம்மண்ணன் கடுங்கோபம் கொண்டு வீரைய்யனை கொல்ல திட்டமிடுகிறார்கள். இதை அறிந்த காதலர் இருவரும் வெளியேறுகின்றனர். இதனால் பொம்மண்ணன் வீரைய்யன் இருவருக்குமிடையே நடந்த கடும் சண்டையில் பொம்மண்ணன் மரணமடைகிறார்.
வீரைய்யன் பொம்மியுடன் திருச்சி சென்று அங்கு ஆட்சி செய்த விஜயரங்கநாயக்கர் படையில் சேர்ந்து தனது வீரத்தால் திறமையால் முன்னேறி நன்மதிப்பை பெறுகிறார்.  மதுரையை ஆண்ட பிற்கால பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட அரசுரிமை போராட்டத்தை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் படைத்தலைவர் மாலிக் கபு+ர் மதுரையின் மீது போர் தொடுத்து பாண்டிய சகோதரர்களின் ஆட்சியை இழக்க செய்கிறார். இதை தொடர்ந்து இஸ்லாமியர்களை விரட்டி அடித்து விஜய நகர பேரரசை நிறுவுகிறார்கள். தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி  மாற்றங்களினால் கிருஷ்ணதேவராயர் வலிமைமிக்க நாயக்க மன்னர் ஆகிறார். பாண்டியர்கள் ஆட்சியின்  போது பெருமளவில் போர் வீரர்களாய் இருந்த கள்ளர்கள், மாலிக்கபு+ரின் படையெடுப்புக்குபின் வந்த நாயக்கர் ஆட்சிகளினால் கள்ளர்கள் படைபிரிவில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதனால் வாழ்க்கையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு கொள்ளயடிக்கவும், வழிப்பறி செய்யவும் முற்படுகின்றனர்.
திருமலைநாயக்கர் சிரமாய் எழுதிவிட்டார்.
துருசாக ஓலைகொண்டு தூதுவர்கள் வந்தார்கள்
உத்தரவும்  தானும் நல்ல ஒப்பமுடன் கையெழுத்தும்
வந்ததொரு உத்திரத்தை வாசித்து சேதி சொன்னார்.
விசயரெங்க சொக்கலிங்க வேந்தனுமே தான் கேட்டு.
திருச்சி கோட்டைத் தலைவன்  விசயரெங்கனுக்கு மதுரை மன்னர் திருமலை ஓலை அனுப்பி வைத்தார். ஓலை என்றால் உத்திரவு ஓலை. மன்னரின் உத்திரவை அமுல் படுத்துவதில் பெரும் பரபரப்பு காட்டினார் விசயரெங்கன் ஓலையில் இருந்த  செய்தி மன்னர் திருமலையின் கௌரவத்தையே கேள்விக் குறியாக்கி இருந்தது.
எத்தனையோ அயல் மன்னர்களை அடக்கி ஆளும் திருமலையால் உள்ளுர் கள்ளர்களை ஒடுக்க முடியவில்லை. மதுரை மக்கள் பரிதவித்தார்கள். அவர்கள் வாய்விட்டுச் சொல்லவில்லை. மன்னனைப் பார்த்த பார்வையில் இகழ்ச்சி எழத் துவங்கியிருந்தது. நிலைமை நீடித்தால் மன்னவரின் கீர்த்திக் கு பங்கம் ஏற்படும். மதுரை நிலைமையை விசயரெங்கனே கூறுவதாகக் கவிஞர் பாடுகிறார்.
    தன்னரசு நாட்டில் தனிக்காட்டு கள்ளர் எல்லாம்
    நாட்டினுள் கள்ளர் எல்லாம் நலமாகக் கூட்டமிட்டு
    அழகருட கோவிலுக்கு ஆரொருத்தர் போனாலும்
    தாலிப்பறி சீலைப்பறி தான்பிடுங்கிப் போறதுவும்
    ஆண்பிள்ளையைக் கண்டால் ஆனதலை கொய்கிறதும்
    மதுரைத் தெருவீதி வடக்கு நல்ல வாசல் மட்டும்
    தனியே புறப்பட்டால் தலைகொண்டுபோய்விடுவார்
        கண்ட கண்ட இடங்களில் கள்ளர் உபத்திரவம்
அழகர் மலையிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் விவசாயம்  செய்ய வழியின்றி வாடினார்கள். அழகர்மலை ஊற்றுத் தண்ணீர் தவிர வேறு நீராதாரம் கிடையாது. இப்போதல்லவா பெரியார் கால்பாசன வசதி வந்துள்ளது. அந்தக் காலத்தில் வானம் பார்த்த பு+மி ஒரு காலத்தில் பாண்டிய மன்னர்களின் படைவீரர்களாக இருந்த இந்த தீர மக்கள் வாழவழியின்றி இடைக்காலத்தில் களவுத் தொழிலில் இறங்கினார்கள். ஒரு பகுதியினர்தான் இப்படி. இன்னொரு பகுதியினர் காவல் தொழில் புரிந்து வந்தார்கள். காவலுக்கு இவர்களை அமர்த்திவிட்டால் அங்கே களவு நடக்காது. விஷயம் வேலையில்லாதது அது கொடுக்கப்பட்டால் களவு நின்று போகும். கொடுக்கப்படாவிட்டால் களவு அதிகமாகும். பெரும் கூட்;டமாகவும் நாடு என்று தன்னகரம் நடத்தி வந்த இவர்களை அடக்குவது மதுரை மன்னருக்கும் எளிதாக இல்லை.
இந்த பலசாலிகளை எதிர்க்க மதுரை மன்னர் சரியான ஆள் தேடினார். திருச்சியில் கள்ளர்களை ஒடுக்கி வைத்த வீரன் பற்றி அவர் கேள்விப்படட்டிருக்க வேண்டும். அதனால் தான் விசயரெங்கனுக்கு வந்தது ஓலை. இதைபுரிந்து கொண்டே இவரும் சட்டென்று முடிவெடுத்தார்.
    ஆருக்கும் அடக்கி வைக்க அஞ்சாத கள்ளரெல்லாம்
    ஒருத்தரால் ஆகாது உள்ளபடி சொல்கிறேன்
    ஆயிரம் பொன் சேர்வை ஆணிமுத்து வீரையனைச்
    சேனை தளங் கூட்டித் தெற்கே அனுப்பி வைத்தால்
    கள்ளர் பத்து நாட்டைக் கடுகவே கொன்றுழக்கிச்
    சீக்கிரமாய்த் தான் வருவார் தென் இளமைக்காரர்.
ஒருவருக்கும் அடங்காத கள்ளர்களை வீரனால் அடக்க முடியும் என்பதே கணக்கு. அவனுக்கு வேண்டிய சேனைகளைத் தந்தால் அதைச் செய்துகாட்டுவான். ஏற்கனவே அனுபவம் இருக்கிறது. திருச்சியில் விசயரெங்கனின் முடிவை இதரர்களும் ஆகட்டும் என சொன்னார்கள் என்று வருகிறது. வீரனின் ஆற்றல் ஊருக்கே தெரிந்திருந்தது.
வீரையனைத் தான் அழைத்து வெகுமதியும் தான் கொடுத்தார். விசயரெங்கன் என்கிறார் கவிஞர். உரிய கவனிப்பும் இருந்தது. தங்களால் முடியாததை வீரனை வைத்து முடித்துக் கொள்ளப்பார்த்தார்கள் ஷத்திரிய ராஜாக்கள்.  நன்கு கொம்பு சீவி விட்டார்கள். கள்ளர்களைத் தாங்களே நேருக்கு நேர் சந்திக்காமல் பஞ்சமர் குல வீரனை அனுப்பியதில் மிகுந்த ராஜதந்திரம் இருந்தது.
இந்த உட்பொருளை வீரன் உணர்ந்தானோ இல்லையோ? மதுரை மன்னர்; தனது மணாளனை அழைத்திருக்கிறார் என அறிந்து பொம்மி பு+hpத்துப் போனாள். புது வாழ்வு துவங்கியது எனப்போனாள். அங்கே வாழ்வின் இறுதியைப் காணப்போவதை அப்போது அவள் அறியாள்.
படையோடு வீரன் மதுரை நோக்கி பயணித்த காட்சியை அபாரமாக வருணித்திருக்கிறார் கவிஞர். ஏதோ மகாராஜாவின் பவனி போல் தொpகிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் ராஜ வம்சத்தினர் என்னதான் செய்ய மாட்டார்கள்? வீரனை ஒரு ராஜா போல அனுப்பி  வைத்தார்கள்.
வெண்சாமரை வீச வேசையர்கள் ஆடிவர
    கட்டியங்கள் கூறிவர கவரி பணி மாறி வர
    ராசாதி ராசமன்னர் நலமுடனே கூடி வர
    நடந்தான்காண் வீரையனும் நாட்டமுடன்  தென்திசைக்கு

    திருச்சியிலிருந்து இன்னும் தென் திசையிலிருந்த மதுரை நோக்கி வருகிறான் வீரன். அவனோடு பெரும் சேனை வருகிறது. பு+மி அதிர பு+லோகம் தத்தளிக்க செந்தூள் பறக்க வருகிறது.
வழியிலே மணப்பாறை வந்தது. அந்த ஊரிலே அடித்தான் கூடாரம். மணப்பாறை வீதியுள்ள மன்னரெல்லாம் வந்து கண்டார் என்கிறார் கவிஞர். மன்னர் திருமலை காரியமாகப் போவதால் இடையிலிருந்த ஊர்த்தளபதிகள் எல்லாம் உபசரித்தார்கள். இப்படியே துவரங்குறிச்சியிலும் செய்து கொடுத்தார் அதன் பூச்சி நாயக்கர். அங்கிருந்து நத்தம் போய்ச் சேர்ந்தான் வீரன். அதன் லிங்கையன் இவனைக் கண்டுகொண்டான். பஞ்சமர் குலத்தில் பிறந்தவன் என்கிற பாகுபாடு எதையும் இந்த உள்ளுர் தளபதிகளும் காட்டிக்கொள்ளவில்லை என்பதை நோக்க வேண்டும். முடிவில் வைகைக்கரை வந்து சேர்ந்தான் வீரன்.
மதுரைக் கோட்டைக்காரர்கள் மன்னர் திருமலையிடம் சேதி சொன்னார்கள். வந்தது யார் என்று பார்த்துவர அரிக்கார பிராமணர் இருவரை அனுப்பி வைத்தார். அவர்கள் வீரனைக்கண்டு சேதி அறிந்து வந்து திருமலையிடம் சொன்னார்கள். மகிழ்ந்த மன்னர் வீரனை வரவேற்க ஏற்பாடு செய்தார்.
        நாகசுர மேளம் நாட்டியங்கள் ஆடிவர
        பஞ்சவர்ண  டால் விருது பக்கமே சூழ்ந்துவர
        வைகைக் கரையை விட்டு வாரானாம் தென்மதுரை
இவ்வளவு ஆர்ப்பாட்டத்தோடு வீரன் மதுரைக் கோட்டைக்குள் நுழையும் ஊர் மக்களுக்கு ஒரே பரபரப்பு. யார் வருவது என பார்க்க ஆவல் மச்சேறிப் பார்ப்பாரும், மதிலேறி பார்ப்பாரும் என்று வீதியில் உள்ள ஜனமெல்லாம் வேடிக்கை பார்;;த்து நிற்க வீரனும் பொம்மியும் வந்தார்கள். மன்னன் ஒதுக்கியருந்த மாளிகையில் பொம்மியைத் தங்க வைத்துவிட்டு வீரன் மட்டும் பல்லக்கு மீதேறி மன்னரைப் பார்க்கப் போனாh;. வீரன் மன்னர் சந்திப்பை கவிஞர் விவரிப்பதை நோக்குங்கள்.
        பல்லக்கு விட்டிறங்கி பாங்கான வீரையனும்
        திருமலை நயக்கர்தனைத் திரமாகக் கைதொழுதார்
        கூடவே கை தொழுதார் குணமுள்ள நாயக்கருந்தான்
        வாருமென்று சொல்ல வகையாய் இடம் கொடுத்தார்
        பக்கமே தானிருத்திப் பாங்கான வார்த்தை சொல்லி
மிகுந்த மரியாதையோடு வீரனை வரவேற்றதாக வருணித்துச் செல்கிறார் கவிஞர். ஏதோ பக்கத்து நாட்டு ராஜாவை வரவேற்றது போலிருக்கிறது. இவ்வளவுக்கு இருந்திக்காது என்றாலும் கௌரவமாகவே வரவேற்றிருக்கிறார் என ஊகிக்க இடம் தருகிறது.
மன்னர் எதற்குத் தன்னை அழைத்திருக்கிறார். எதற்கு இவ்வளவு அன்பான உபசரிப்பு என்பதை மறக்கவில்லை வீரன் அவனும் காரியார்த்தமாகப் பேசினான். வீரைய்யன் மனைவியுடன் மதுரையை அடைந்ததும் திருமலைநாயக்கர் கள்ளர்களை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். யாராலும் வெல்ல முடியாத, மதுரை மக்களை பயமுறித்திக் கொண்டிருந்த சங்கிலி கருப்பன் என்ற கொள்ளையனை கொன்றதால் மகிழ்வுற்ற மன்னன் வீரைய்யனை படைத்தளபதியாக நியமிக்கிறார். வீரனும் இரவு பகல் பாராது பலத்த காவலை ஏற்படுத்தி 4000 கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி மதுரையில் அமைதியை நிலவ செய்கிறார். இதனால் மன்னர் வீரைய்யனை மதுரை வீரன் என சிறப்பிக்கிறார். 1634 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் படையெடுத்து 1635-ம் ஆண்டு ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானத்தின் மீது போர்தொடுத்து நாஞ்சில் நாட்டை கைப்பற்ற ஆரல்வாய் மொழி கணவாய்; வழியாக மலையாள மன்னர்கள் படையெடுப்பின் போதும் படைத்தலைவனாக பொறுப்பேற்று மன்னருக்கு மகத்தான வெற்றியை பெற்றுத்தந்தார் நமது மதுரை வீரன். இத்தகையவரை தண்டிக்கும் அளவுக்கு மன்னருக்கு கடுங்கோபத்தை உண்டாக்கிய நிகழ்ச்சிதான் என்ன?  ஆராய்வோம்.
மன்னர் அவர் நினைவாக திருமலைநாயக்கர் மஹால் கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார். கட்டிட வேலைகள் இடிந்துகொண்டே இருந்ததால் ஒரு சக்தி வாய்நத முனியின் வேலை என்றும் அதை விரட்ட வேண்டுமாயின் அம்முனி திருப்தி அடையும் வரை நரபலியிட வேண்;டும் என சோதிடர் கூறியதை நம்பி மூட நம்பிக்கையில் மன்னரின் ஆணையில் நரபலி கொடுப்பதற்காக  அருந்ததிய இன மக்களை கூட்டம் கூட்டமாக சிறையில் அடைத்து நர பலியை நிறைவேற்றி வந்தனர். உயிருக்கு பயந்து அவர்களும் ஓரிடத்தில் தங்காமல் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தேடி சிதறினார்கள். இதை அறிந்த மதுரை வீரன் படைத்தலைவன் என்ற அதிகாரத்தால்  அக்கொடுஞ்செயலை நிறுத்துகிறார். மன்னனின் ஆணை ஒரு படைத்தலைவனால் அதுவும் ஒரு அருந்ததியரால் நிறுத்தப்படுவதா?  மக்கள் செல்வாக்கும் படை வீரர்களின் ஆதரவும் மதுரை வீரனின் நியாமான நிலைக்கு பக்க பலமாய் இருந்தது. ரகசியமாய் இருந்ததை வெட்ட வெளிச்சமாக்கி நர பலியை நிறுத்தியதற்காக மன்னர் ஆத்திரம் அடைந்தார். இச் செயலை காரணம் காட்டி தண்டித்தால் மதுரை வீரன் பேரும் புகழும் அடைவதோடு  தனது பெருமைக்கு சிறுமையாகும் என்பதை எண்ணிப்பார்க்கிறான்.
இன்றைய காலத்தில் வேண்டுதல் நிறைவேறிவிட்டால் ஆடு, மாடு, கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்துவது போல அன்றைய காலத்தில் தான் பெற்ற பிள்ளைகளையே கோவிலுக்கு தந்தார்கள். அவ்வாறு பல பெண்களை பெற்றவர்கள் தனக்கொரு ஆண் மகனை கொடுத்தால் உனக்கொரு பெண் குழந்தையைக் கொடுக்கிறேன், என்று வேண்டுவார்கள். கோரிக்கை நிறைவேறிவிட்டால் தான் பெற்ற பெண் பிள்ளைகளில் ஒன்றை கோயிலில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அவ்வாறு விடப்பட்டப் பெண்தான் வௌ;ளையம்மாள் இந்தப் பெண்களை தாசி என்று கூறுவர். இவர்கள் கோயிலின் சொத்து. இந்த பெண்கள் கோயிலை அலங்கரிப்பது, விழாக் காலங்களில் நிகழ்ச்சிகளில் ஆடுவது, பாடுவது, அம்மனை வழிபடுவது இவர்களின் வேலை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இந்த பெண்களை அரசன், அமைச்சன் கோயிலின் நிர்வாகி போன்றவர்கள் வைப்பாட்டியைப்போல் வைத்திருப்பார்கள். இது அன்றைய வழக்கில் இருந்தது.
வரலாறும் அம்மானையும் ஒத்துப்போகிறது. அப்படியெனில் மதுரைவீரன் கதை 1634 க்கு முன்னும் பின்னும் நடந்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாகிறது.
அம்மானையில் மீனாட்சி சன்னதி வருகிறது. கம்பத்தடி வருகிறது. இவையெல்லாம் இன்றும் இருக்கின்றன. மதுரை வீரன் வாழ்வைப் பொறுத்தவரை கம்பத்தடி மிக முக்கியமானது. கம்பத்தடிவீரன் என்றும் அம்மானையில் அழைக்கப்பட்டிருக்கிறாh;.
மதுரை மீனாட்சி கோவிலில் கம்பத்தடி மிக அழகான ஒன்று கொடிக்கம்ப மண்டபம் என்றும் துவஜஸ்தம்ப மண்டபம் என்றும் அழைப்பர். இந்தக் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு கொடிகள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் சுவாமிகளுக்கு கொடிகள் இருந்தன. திருவிழாக்கள் எல்லாம் கொடியேற்றத்துடன் துவங்கும். இப்போதும் கோவில்களில் கொடிமரங்கள் உள்ளன. ஒரு முக்கிய மாறுதல் துணிக்கொடிக்குப் பதிலாக உலோகத்திலேயே கொடி செய்து வைத்துவிட்டார்கள். கம்பத்தின் உச்சியில் அந்த உலோக கொடியை பெரிய கோவில்களில் எல்லாம் காணலாம். கொடியேற்றம் என்கிற சடங்கும் நடக்கிறது. அப்படியொரு கொடிக்கம்பம் மீனாட்சி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி அருகே உள்ளது.
இந்தக் கம்பத்தடி மண்டபத்தில் கி.பி. 1572-1595ல் மதுரை ஆண்ட கிருஷ்ண வீரப்பநாயக்கரால் கட்டப்பட்டது.. அதாவது, மன்னர் திருமலையின் பாட்டனார் காலத்திலேயே  இது இருந்தது. அம்மானையில் வரும் கம்பத்தடி நிகழ்வுகள் இங்கே நடத்திருக்கலாம்.
மீனாட்சி சன்னதி முன்பு ஒரு கம்பத்தடி உள்ளது. அதனருகே திருமலை மன்னர் தனது மனைவியருடன் இருக்கிறார். இந்தக் கம்பத்தடியிலும் அவை நடத்தியிருக்கலாம். இதற்கு நேர் கிழக்கேதான் பொற்றாமரைக் குளம் உள்ளது.
மதுரை மீனாட்சி கோவில் வெளிப்புறத்தில் கிழக்குக் கோபுர வாசலருகே கோபுரச் சுவரையொட்டி ஒரு சிறு கோவில் உள்ளது. அதற்குள் மதுரை வீரன் பொம்மி வௌ;ளையம்மாளோடு காட்சி தருகிறார்;. இப்போதும் பக்தர்கள் வந்து வணங்கிப் படையலிட்டுச் செல்கிறார்கள்.
ஒரு படைத்தளபதியாக இருந்தும் கூட சக்கிலியன் என்னும் காரணத்தில் மதுரை மீனாட்சி கோவிலினுள் நுழைய முடியவில்லையே என்ற சாதிய பாகுபாட்டை நினைத்து ஆத்திரமடைகிறார் மதுரை வீரன். தன் இன மக்களை இழிவுப் படுத்தும் மன்னனின் இழி செயல்களை தட்டி கேட்க நினைக்கும் மதுரை வீரன் தான் படைத்தளபதியாக இருந்த வரையில் தனக்கு ஆதரவாக இருந்த படை வீரர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்று திரட்டி புரட்;சி படை ஒன்றை அமைக்கிறார். இது மன்னனின் உட்சகட்ட கோபத்திற்கு வழிவகுக்கிறது. தன்னுடைய நயவஞ்சக சூழ்ச்சியால்  வஞ்சக எண்ணம் கொண்ட மன்னன்  நீதி விசாரணை எதுவுமின்றி இரவோடு இரவாக மாறுகால் மாறுகை வெட்டி மதுரை வீரனை கொலை செய்துவிடுகிறார்கள்.
எனது ஆய்வில் மூன்று முக்கிய விஷயங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஒன்று மதுரை வீரனுக்குத் தரப்பட்ட கொடூரமான தண்டனைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பில்லாமல் போய்விடவில்லை. எதிர்ப்பை இறந்த மதுரை வீரனே செய்ததாகச் சொல்லப்படுவதைக் காணும்போது அவனது குலத்து மக்களே  அந்த எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்று முடிவு கட்ட வேண்டியுள்ளது.
இரண்டு, மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட நிலையிலும் மதுரை வீரன் மீனாட்சி கோவிலுக்குள் புகுந்திருக்கலாம். அங்கே அவன் சிரசு வெட்டப்பட்டிருக்கலாம். அதனால் தான் அவன் கம்பந்தடி வீரன் எனப்படுகிறான் என்பது. இதனால் இங்கே முதன்முதலில் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் மதுரைவீரன் என்றாகிறது.
மூன்று ஒரு சமரசமாக முதலில் மீனாட்சி கோவிலுக்குள், கம்பத்தடியில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை வீர சுவாமியின் விக்கிரகம் பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டது. பெரும் கொந்தளிப்பு எழுந்ததால், மற்றொரு சமரசமாக அது கிழக்கு கோபுர வாசலருகே கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டது. இன்றளவும் அங்கே தான் அந்தச் சிறுகோவிலில் தான் மதுரை வீர சுவாமி பொம்மி, வௌ;ளையம்மாளுடன் காட்சி தருகிறார்.
அந்தச் சிறு கோவிலின் பின்னால் இப்படியொரு வரலாறு ஒளிந்திருக்கிறது. அதற்;காகத் தோண்டப்பட்ட அஸ்திவாரத்தில் அவனது வரலாறு போட்டு மூடப்பட்டது. ஆனால் அதையும் மீறி சரித்திர உண்மை  தன் முகம்  காட்டுகிறது
இறுதியாக தனது 33 வயதின் மத்தியில் ஆவணி 20 தேதிக்கு பிறகு மதுரை வீரன் வாழ்ந்ததற்கான  தடையங்கள் ஏதுமில்லை. எப்படியிருப்பினும் கொலை செய்த தடையத்தினை அழிக்க மிகக்குறைந்தது 2 நாட்களாவது தேவைபடும் என்பதால் ஆவணி 18 -19 தேதிகளுக்கு முன் அதாவது ஆவணி 17 அன்று தான் நமது இனம்காத்த படைத்தளபதி. மாவீரன். மதுரை வீரன் திருமலைநாயக்கனின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே தற்போதைய ஆய்வுகளின் முடிவு நமக்கு தெரியப்படுத்துகிறது.
தெய்வீக மூடிகளைக் கழற்றிப் பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்களின் கிளர்ச்சி முகம் தெரிகிறது. அந்த தரிசனம் உத்வேகத்தை வழங்குகிறது. பஞ்சமி நிலங்களை மட்டுமல்ல, பஞ்சமர் வரலாறுகளையும் மீட்க வேண்டும் என்பதற்கு இப்படியொரு நடைமுறைப் பயன்பாடு இருக்கவே செய்கிறது.

பின் குறிப்பு :

     தமிழகத்தின் புகழ்மிக்க வஸ்தாத் வாத்தியாரான சுல்தான் பாட்ஷாவிடம்  பல்வேறு போர் கலைகளை மதுரைவீரன் பயின்றார்.
மதுரை வீரனின் பெற்றோர்களின் குலதெய்வமான மதுரகாளியம்மன் கோவிலானது சிறுவாச்சியூரில் அமைந்துள்ளது.  அங்கு மதுரகாளியம்மன் கோயில்குளம் இருப்பது உறுதியாகிறது.
கண்ணப்பாடியில் உள்ள மதுரைவீரன் சிலை இங்கு போர் கலை கற்றதிற்கு அடையாளமாக தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் உள்ளது. முன்பு ஒருங்கிணைந்த  கண்ணப்பாடி கிராமம். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மதுரைவீரனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை  சார்ந்த பொம்மியம்மாளும் சாதி மறுப்பு திருமணம் செய்ததினால் மதுரைவீரன் வாழ்ந்த கிராமமக்கள் விரட்டி அடிக்கப்;பட்டனர் இந்த நிலையில் வஸ்தாத் சுல்தான் பாட்ஷா வாரிசுகள் மற்றும் பள்ளர் சமுதாயத்தின் உதவியோடு நத்தக்காடு கிராமத்தில் அடைக்கலம் புகுந்தனர். இதற்கு சான்றாக இன்றைக்கும் பள்ளர் தெருவில் இணைந்து ஒரு சக்கிலியர் தெரு இருக்கிறது.
பொம்மன்பாடியில் ஆய்வு செய்த வகையில் மதுரை வீரன் பெற்றோர்கள் சின்னான், செல்லி தோல்பதனிடும் தொழில் செய்து வந்ததற்கு  ஆதாரமாக ஆவாரங்காடும் மதுரைவீரன் வேட்டையாடிய கொல்லிமலை தொடர்ச்சியான பச்சைமலையும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக